திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க !புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க !கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க...
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
